இந்தியாவில் கொரோனா தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4300 ஐ தாண்டியுள்ளது. 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உள்ளது. இந்தியாவில் மகாராஷ்ட்ராவுக்குப் பின்னர் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது.
ஆனால் மத்திய அரசோ மற்ற வட இந்திய மாநிலங்களை விட தமிழக அரசுக்கு கம்மியான நிதியை ஒதுக்கி வஞ்சித்துள்ளது. தமிழகத்தை விட பாதிப்பு கம்மியாக உள்ள உத்தரபிரதேசத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தமிழகத்துக்கு 510 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் ஓரவஞ்சனை என தமிழக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கேள்வி எழுப்பியுள்ளார்.
SK 23:…
நடிகர் அஜித்தின்…
நடிகர் யோகிபாபு…
Rajkumar periyasamy:…
மாரி செல்வராஜ்…