">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எனக்கு யாரும் வரல…. விஜய், சூர்யான்ன உடனே கொதிக்கிறீங்க.. விளாசிய வனிதா…
நடிகை மீரா மிதுன் ஆரம்பம் முதலே சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார். அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் பதிலுக்கு ஆபாச அர்ச்சனைகளை தர ரத்தக்களரி ஆனது சமூகவலைதளம். அதைக் காண சகியாத பாரதிராஜா,விவேக் போன்ற மூத்த கலைஞர்களே கண்டித்தனர். ஆனாலும், மீராமிதுன் அடங்கவே இல்லை. தொடர்ந்து விஜய் ரசிகர்களிடம் சண்டை போட்டு வருகிறார்.
இந்நிலையில், சண்டை, சர்ச்சைக்கு பெயர் போன வனிதா விஜயகுமாரிடம் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் கூறிய அவர் ‘யாரை பற்றியும் யாரும் பேசக்கூடாது. அன்று என்னை பற்றி பலரும் அவதூறாக பேசினார்கள். ஆனால், எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை. இன்று சூர்யா, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் என்பதால் எல்லோரும் கொந்தளிக்கிறார்கள். இது மிகவும் தவறு’ என அவர் கூறினார்.