கடந்த சில நாட்களாக தனது அறிவிக்கப்படாத கட்சியின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த நடிகர் ரஜினி இன்று செய்தியாளர் சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி தெரிவித்தார். அப்போது ‘எனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை… எனக்கு அது ரத்தத்திலேயே இல்லை.. இளைஞரை, நேர்மையானவரை அமர வைக்க வேண்டும்… நல்லவரை முதல்வர் ஆக்குவோம்.. கட்சிக்கு மட்டுமே நான் தலைவன்… முதல்வர் பதவி வேண்டாம்…இதுவே என் திட்டம்
ஆனால், இதை மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தான் ஏமாற்றம் எனக்கூறினேன். ஆனால், அரசியலில் அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது.நான் முதல்வர் இல்லை என அனைவரும் பேசி அதன் மூலம் மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் ஒரு எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் என பேசினார்.
ரஜினி தனது அரசியல் முடிவு குறித்து இன்று முழுவதுமாக வெளிப்படையாக கூறிய கருத்துக்கள் அவர் அரசியலுக்கு வருவார் என்கிற நம்பிக்கையில் இருந்த அவரின் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுஒருபுறம் எனில் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அவரை கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…