சின்ன வீடா வரட்டுமா…குத்துப்பாடல்களால் பிரபலமான தேஜாஸ்ரீ

Published on: July 9, 2021
---Advertisement---

a576169de3b04cd3b37420f6a224a237

சின்ன வீடா வரட்டுமா…பெரிய வீடா வரட்டுமா…என தமிழ் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் தேஜாஸ்ரீ. 2003ல் வெளியான ஒற்றன் படத்தில் வந்த இந்த பாடலுக்கு அர்ஜூனுடன் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறக்கத்தில் ஆழ்த்தினார். பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. மகாராஷ்டிராவில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்.

df5c4763053ea4fbcfab1ba2b34a62b9

தேஜாஸ்ரீ இந்திய திரைப்பட நடிகை. கதக்களி நடனர் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிப்பவர்;. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் நடிப்பவர்;. தமிழில் இவர் நடித்த மதுர, ஒற்றன் மற்றும் ஆர்யா போன்ற படங்கள் இவரை பிரபலமாக்கியது.

தேஜாஸ்ரீ (சோனாலி ஜெய்குமார் காளே ஜூலை 9) இந்தியத் திரைப்பட நடிகை. இவர் கதக் நடனத்தினை கற்றவர். இவர் தந்தை இந்த நடனத்தில் வல்லவர். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும், குத்தாட்டப்பாடல்களில் நடனமாடுபவராகவும் தோன்றி அவ்வப்போது அசத்தி ரசிகர்களை கிறங்கடிப்பார். வாளிப்பான உடல் அழகு தான் இவரது பிளஸ் பாயிண்ட். அதனால் தான் தளபதி விஜய் உடன் மதுர படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

63d107238e6165866cf931c7476db826-2-2

மயங்கினேன் தயங்கினேன், பிரம்மதேவா, காதல்னா சும்மா இல்லை, நடிகை, தருரங்கா, அந்த நாள் ஞாபகம், ஆர்யா, நான் அவனில்லை, வீராப்பு, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், இம்சை அரசன் 23ம் புலிகேசி, நடிகை, அசோகா, வித்யாரதி, கள்வனின் காதலி, கோடம்பாக்கம், அது ஒரு கனாக்காலம், தகதிமிதா, மதுர, ஒற்றன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஆர்யா, நான் அவனில்லை, வீராப்பு, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் ஆகிய படங்களில் 2வது கதாநாயகியாக நடித்துள்ளார். 

2012ல் வெளியான மயங்கினேன் தயங்கினேன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் தேஜாஸ்ரீ நடித்தார். இப்படம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இவரது நடிப்பில் பல புகழ்பெற்ற படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இப்படத்தில் சூழாயினி கேரக்டரில் வந்து அசத்துகிறார் தேஜாஸ்ரீ. 

ca971da1abc30fd0ec704a528bbc7e93

தேஜாஸ்ரீ என்றால் தமிழில் விளக்கு என்று பொருள். இவரது வாழ்க்கையில் வசந்தம் ஒளிவிளக்காக ஜொலிக்கட்டும். 

இன்று பிறந்தநாள் காணும் தேஜாஸ்ரீக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள். 

Leave a Comment