Connect with us

அர்ஜூன் நடத்தும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி – போட்டியாளர்கள் பட்டியல் இதோ!…

அர்ஜூன் நடத்தும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி – போட்டியாளர்கள் பட்டியல் இதோ!…

அர்ஜூன் நடத்தும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி – போட்டியாளர்கள் பட்டியல் இதோ!…

738ca3f306b156e61f1c85990bed5e42-2-2

ஒரே வீட்டில் 100 நாட்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். தமிழில் கமல்ஹாசன் நடத்த பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்துவிட்டது. விரைவில் 5வது சீசன் துவங்கவுள்ளது.

73f1e220c369764c2e955f41b4f40baf

இந்நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிய நிகழ்ச்சி விரைவில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. வெளிநாட்டில் புகழ்பெற்ற ‘சர்வைவர்’ (Survivor) நிகழ்ச்சிதான் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. போட்டியாளர்களை ஆளே இல்லாத ஒரு தனித்தீவில் இறக்கி விட்டு விடுவார்கள். அங்கேயே அவர்கள் தங்கி இருந்து சவால்களை சந்திக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தரும் டாஸ்க்கையும் செய்து முடிக்க வேண்டும். 100 நாட்கள் தாக்குபிடிக்கும் போட்டியாளருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை ஜீ நெட்வொர்க் பெற்றுள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்காவில் ஒரு தனித்தீவை வாடகைக்கு எடுத்துள்ளனர். தமிழில் மக்களிடம் பிரபலமானவர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். கொரோனா பரவல் குறைந்து விமானங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதும் இந்நிகழ்சி துவங்கும் என எதிர்பார்க்கப்ட்டது. அதன்படி தற்போது இந்த நிகழ்ச்சி தொடர்பான வேலைகள் சூடுபிடித்துள்ளது. நடிகர் அர்ஜூன் இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். 

168a7e945735048d280bce64d2e8e9ad-2

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் முதற்கட்ட போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

நடிகை விஜயலட்சுமி
நடிகை விக்ராந்த்
நடிகர் நந்தா
நடிகர் பெசன்ட் ரவி
நடிகர் உமாபதி
நடிகை சிருஷ்டி டாங்கே
நடிகை காயத்ரி ரெட்டி
விஜே பார்வதி

என்பதுதான் அந்த லிஸ்ட்.. இன்னும் சில போட்டியாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி முதல் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை இந்நிகழ்ச்சி ஜீ தமிழில் வெளியாகவுள்ளது.

 

Continue Reading
To Top