ஆபாச படம் பார்ப்பவர்கள் பட்டியல் ; மேலும் சிக்கும் 40 பேர் : காவல்துறை அதிரடி

எனவே, அவர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு மனநல சிகிச்சை எடுக்கப்படும்’ என ஏற்கனவே டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சிறார் ஆபாசப்படம் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்து பார்த்தல், பகிர்தல் தொடர்பாக 30 பேரின் பட்டியல் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மேலும் 40 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Published by
adminram