Connect with us

ரஜினி பாஜககாரர் என்பது அவருக்கே தெரியாது: ஜோதிமணி எம்பி

ரஜினி பாஜககாரர் என்பது அவருக்கே தெரியாது: ஜோதிமணி எம்பி

சூப்பர் ஸ்டார் ரஜினியை விமர்சனம் செய்யாத தமிழக அரசியல்வாதியே கிட்டத்தட்ட இல்லை என்ற நிலையில் தற்போது இந்த பட்டியலில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்களும் இடம்பெற்றுவிட்டார்.

ef96db6f628841abeb9dba4d3de28ad3

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட கரூர் எம்.பி. ஜோதிமணி பின்னர் பேசியதாவது:

ரஜினிகாந்த் ஒரு கந்துவட்டிக்காரர். அவர் பாஜககாரர் என்பது அவரை தவிர அனைவருக்கும் தெரியும். பாஜகவின் கொள்கைகளுக்கு மக்களிடம் எதிர்ப்பு எழும் போதெல்லாம் அவர் குரல் கொடுப்பார். தமிழக மக்கள் பிரச்சினைக்காக அவர் ஒரு போதும் குரல் கொடுத்ததில்லை’ என்று கூறினார்.

மேலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது. அப்படி மேற்கொண்டால் அதற்காக என் உயிரையும் கொடுத்தும் அதனை தடுப்பேன் என்றும் ஜோதிமணி எம்பி தெரிவித்தார்.

Continue Reading
To Top