வாழு வாழவிடு!.. 30 வருட சினிமா வாழ்க்கை.. அஜித் வெளியிட்ட செய்தி

by adminram |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். எந்த பின்புலமும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து வாய்ப்பு பெற்று, அதை தக்கவைத்து, பல வெற்றி தோல்விகளுக்கு பின் தற்போது மாஸ் ஹீரோவாக, ரசிகர்கள் செல்லமாக தல என அழைக்கும் மாஸ் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். தற்போது இவர் நடித்து வரும் வலிமை திரைப்படம் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

தமிழில் இவர் நடித்த ‘அமராவதி’ இவரின் முதல் திரைப்படமாகும். இப்படம் 1993ம் ஆண்டு வெளியானது. ஆனால், அதற்கு 2 வருடம் முன்பே அஜித் ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். எனவே, இந்த மாதத்தோடு அஜித் சினிமாவில் நடிக்க வந்து 30 வருடம் ஆகிவிட்டதால் அஜித் ரசிகர்கள் #30YearsOfAjithKumar என்கிற ஹேஷ்டேக்கை கடந்த சில நாட்களாகவே டிவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது பி.ஆர்.ஓ மூலம் செய்தி வெளியிட்டுள்ள நடிகர் அஜித் ‘ 'ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோர் ஒரே நாணயத்தில் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பையும் வெறுப்பாளர்களின் வெறுப்பையும் நடுநிலையாளர்களின் கருத்துக்களையும் அன்போடு ஏற்றுக்கொள்கிறேன். வாழு & வாழவிடு! நிபந்தனையில்லாத அன்பு எப்போதும்’ என தெரிவித்துள்ளார்.

Next Story