">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உள்ளாட்சி தேர்தல் ; கணவர் மனைவி இருவரும் வெற்றி – கன்யாகுமாரி அருகே ஆச்சரியம்
கன்னியாகுமாரி அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றும், நேற்று முன் தினமும் நடைபெற்றது. இதில், பல சுவாரஸ்யமான மற்றும் ஆச்சர்ய சம்பவங்கள் நடந்துள்ளது. 80 வயது மூதாட்டி, கல்லூரி மாணவர் மற்றும் மாணவி மற்றும் சில திருநங்கைகள் இந்த தேர்தல் வெற்றி பெற்று ஆச்சயர்யப்படுத்தியுள்ளனர்.
இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குலசேகரபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக பிரமுகரான சுடலைப்பாண்டி போட்டியிட்டார். இவர் மொத்தம் 838 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதேபோல், குலசேகரபுரம், வடக்கு தாமரைகுளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் அவரின் மனைவி சண்முகவடிவு போட்டியிட்டு அவரும் வெற்றி பெற்றுள்ளார். இப்படி, ஒரே ஊராட்சி ஒன்றியத்தில் கணவன், மனைவி இருவரும் வெற்றி பெற்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.