தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2 மாதங்களாகவே வாரங்களின் அடிப்படையில் ஊரடங்கு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. ஜூலை 12 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வந்ததால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அரசு பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ.பாஸ் தேவையில்லை போன்ற முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் ஒரு வாரம், அதாவது ஜுலை 19 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டதோ அது அனைத்தும் அப்படியே நீடிக்கிறது. அதேநேரம் கடந்த வாரம் உணவகம், பேக்கரி, தேநீர் கடைகள் இரவு 8 மணி வரை திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது தற்போது ஒரு மணி நேரம் சேர்த்து இரவு 9 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என்கிற ஒரு சலுகை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…