“என் வாழ்நாள் முழுவதும் உணவை எடுத்துக் கொண்ட பிறகு, இந்த கொரோனா லாக்கடவுன் எனக்கு ஒரு புதிய உணவு முறையையும் ஒரு புதிய பொழுதுபோக்கையும் கற்றுக் கொடுத்தது. நான் என் சொந்த வீட்டில் என் சொந்த உணவை வளர்க்க கற்றுக்கொண்டேன்! ஒரு பதற்றமான அனுபவம் தான் ஆனால் இது நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
தமிழில் ஐயா…
Mari selvaraj:…
Kanguva: கங்குவா…
அறிந்தும் அறியாமலும்,…
ரஜினியின் பிறந்தநாளை…