பாகிஸ்தானில் கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் கோதுமைப் பயிரை நாசமாக்கி விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டத்தை உண்டாக்கியுள்ளன.
காப்பான் படத்தில் ஒரு காட்சியில் தஞ்சை டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருக்கும் நெற்பயிர்களைக் கூட்டம் கூட்டமாக வரும் கேலிஃபெரா என்ற வெட்டுக்கிளி இனங்கள் தாக்கி அழிக்கும். இதுவொரு புனைவானக் காட்சிதானே என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அப்படி ஒரு காட்சி உண்மையிலேயே நடந்துள்ளது.
பாகிஸ்தானின் சிந்து முதல் கைபர் பக்துவா வரை விவசாயிகளின் முக்கியப் பயிராக இருப்பது கோதுமை. அறுவடைக்காக பயிர்கள் நன்றாக வளர்ந்து நிற்கும் நிலையில் அவற்றை நாசம் செய்யும் விதமாக வெட்டுக்கிளிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை தின்று நாசம் செய்து செல்கின்றனர். இதனால் விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலை சமாளிக்கும் விதமாக தகவல் துறை மந்திரி ஃப்ர்டோஸ் அஸ்க்யூ அவான் அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.
நடிகை பார்வதி…
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…