இந்தியாவை பதற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இப்போது தமிழக விவசாயிகளையும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது.
ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பிய பாலைவன வெட்டுக்கிளிகள், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான், ஒரிசா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த வெட்டுக்கிளி கூட்டம் வழக்கமாக வருவதுதான் என்றாலும், இந்த ஆண்டு அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் தமிழகத்துக்கு வராது என சொல்லப்பட்ட நிலையில் இப்போது தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் ஒன்றான கிருஷ்ணகிரியில் இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் காணப்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மத்தியில் பீதியான சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கங்குவா படத்தின்…
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…