More

கமல் படத்திற்காக டீமை மாற்றிய லோகேஷ் கனகராஜ்…இனி எல்லாமே மாறும்…

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜயை வைத்து வெற்றியை கொடுத்திருப்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார். அடுத்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்கிற புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக நடிப்பவர் ஃபகத் பாசிலா அல்லது விஜய் சேதுபதியா என்பது இன்னும் உறுதியாகவில்லை.கொரொனா பரவல் குறைய துவங்கியதும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனத்தெரிகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், வழக்கமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் சத்யம் சூர்யன் விக்ரம் படத்தில் ஒளிப்பதிவு செய்யவில்லையாம். அவருக்கு பதில் கிரிஷ் கங்காதரன் இப்படத்தில் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கிரிஷ் கங்காதரன் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts