Categories: latest news lokesh kangaraj

AK65: ரஜினி இல்லனா அஜித்!.. கிட்டத்தட்ட கன்பார்ம்!.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!….

கோலிவுட்டில் இளசுகளுக்கு பிடித்த இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ போன்ற படங்கள் அவரை இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனராக மாற்றியது. ஏனெனில் அசத்தலான ஆக்சன் காட்சிகளை கொண்ட கேங்ஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார் லோகேஷ்.

விஜயை வைத்து இரண்டு படங்களை இயக்கிய லோகேஷ் அடுத்த ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கினார். ரஜினியுடன் லோகேஷ் இணைந்ததால் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முதல் ஆயிரம் கோடி வசூலிக்கும் தமிழ் படமாக கூலி இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சரியான வரவேற்பை பெறவிலலி. எனவே இப்படம் 500 கோடி மட்டுமே வசூல் செய்தது.

ஒருபக்கம் ரஜினியும் கமலும் பல வருடங்களுக்கு பிண் இணைந்து நடிக்கப் போகும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்ற செய்தியும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என பேட்டி கொடுத்தார் ரஜினி. ஒரு கட்டத்தில் ரஜினி கமல் இணையப் போகும் படத்தை இயக்கப் போவது லோகேஷ் கனகராஜ் இல்லை, நெல்சன்தான் இயக்கப் போகிறார், மீண்டும் ஒரு ரத்தம் தெறிக்கும் ஆக்சன் கதையை லோகேஷ் சொன்னதால் ரஜினிக்கு அந்த கதை பிடிக்கவில்லை, எனவே நெல்சன் சொன்ன கதையை பிடித்து போய் அவரையே இயக்குனராக முடிவு செய்துவிட்டார் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் டைட்டில் டீசரும் வெளியானது. நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது. அனேகமாக அவர் கைதி 2 படத்தையே இயக்கப் போகிறார் என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், விஜய் டிவி கோபி சமீபத்தில் லோகேஷை பேட்டி எடுத்தபோது ‘அஜித்தை வைத்து படம் இயக்கும் ஆசை உங்களுக்கு இருக்கிறதா?’ என கேட்டார். அதற்கு பதில் சொன்ன லோகேஷ் ‘கண்டிப்பாக இருக்கிறது. அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ், ஆக்சன் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும். என் ஸ்டைலில் அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருக்கிறது. நானும் அவரும் இணைவது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். 10 மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தையை தொடங்கியது. ஆனால் இருவருக்குமே நேரம் கூடி வரவேண்டும். கண்டிப்பாக அஜித் சாரை வைத்து ஒரு படம் இயக்குவேன்’ என பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த தகவலை அஜித் ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அஜித்தின் 64வது படத்தை ஆதிக் இயக்கவுள்ள நிலையில் AK65 லோகேஷ் படம் இருக்கலாம் எனவும் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். லோகேஷ் கனகராஜை ரஜினி கைவிட்ட நிலையில் அஜித் கை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Published by
ராம் சுதன்