More

தப்பு செஞ்சிட்டேன்… இந்த முறை நடக்காது… கன்பார்ம் செய்த லோகேஷ்…

விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியான படம் மாஸ்டர். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, பூவையார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லாக் டவுனால் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் சமீபத்தில் தான் திறக்கப்பட்டது. இதில் வெளியான மிகப்பெரிய பட்ஜெட் படம் மாஸ்டர் தான். படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால், படத்தில் விஜயிற்கு வைத்திருந்த மாஸ் காட்சிகளை விட வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதிக்கு தான் அதிக மாஸ் இருந்ததாக பலரும் கருதினர். இது விஜய் ரசிகர்கள் இடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், விரைவில் விஜயை வைத்து மீண்டும் படம் இயக்க இருக்கிறேன். அப்படத்தின் கதை விஜயை மட்டுமே 100 சதவீதம் முன்னிலைப்படுத்தி இருக்கும். இதுவரை விஜயை பார்க்காத ஒரு அவதாரத்தில் அப்படம் உருவாக இருக்கிறதாக தனது சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.

லோகேஷ் விஜயை வைத்து இயக்க இருக்கும் படம் தளபதி 66 ஆக இருக்கும் என நம்பப்படுகிறது. அப்படத்தை பிரபல நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என அறியப்படுகிறது.
 

Published by
adminram

Recent Posts