தனிமையில் சென்ற சிறுமி…. காமக்கொடூரனின் செயலால் சோகத்தில் குடும்பம்!

Published on: February 10, 2020
---Advertisement---

df114b23cf7b9b19b95760efd505442e

உத்தர பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த ரௌடியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பராபங்கி எனும் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தங்களுக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அடல் எனும் ரௌடியின் கண்ணில் அவர் படவே சிறுமியை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளார் அடல்.

அதன் பின் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து அவரைக் கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தைப் பற்றி சிறுமியின் பெற்றோர் போலிஸுக்குத் தகவல் சொல்ல, அவர்கள் அடலைக் கைது செய்துள்ளனர். அடலின் மீது ஏற்கனவே கந்து வட்டிக் கொடுமை, வியாபாரிகளிடம் மாமூல் வாங்குவது ஆகிய அட்டூழியங்களை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கொலையால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர்.

Leave a Comment