புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு வந்த சோதனையைப் பாருங்க...!
ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி. எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளுக்கும் தன் கையால் தானே அளந்தால் எண் சாண் தான் உடல் அளவு இருக்கும். அவர்கள் திறமைசாலிகள் என்பதால் சாண் அளவு அதிகமாக இருக்காது.
அதே போல் அவர்களுக்கும் தோல்வி என்பது நிச்சயம் ஏதாவது ஒரு கட்டத்தில் வரும். அதைத் தான் ஆனைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆவதற்குள் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியே வருகிறது. அதில் பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் ஏதேனும் ஒரு காரணத்திற்காக முக்கியமாக கடன் பிரச்சனையாக இருக்கலாம். அப்படிப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் பெட்டிக்குள்ளே முடங்கிக் கிடக்கிறது என்பதைப் பார்த்திருப்போம்.
அவற்றில் பல படங்கள் உள்ளன. என்றாலும் அவை பெரும்பாலானவை சிறிய பட்ஜெட் படங்களாகத்தான் இருக்கும்.
இவற்றில் புதுமுக நடிகர்களும், சாதாரண நடிகர்களும் நடித்து இருப்பார்கள். இவர்களுக்குத் தான் இந்தப்பிரச்சனை என்றால் நம்ம மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் இந்த பிரச்சனை வந்துள்ளது. கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் லிஸ்ட்; நீண்டு கொண்டே போகிறது. அதை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
அதற்காகத் தான் உங்களுக்கு அந்தப்படங்களின் பட்டியல் கொடுத்துள்ளேன். அது சரி இப்போதைக்கு இந்தப்படங்களின் பெயர்களை மட்டும் தெரிந்து கொள்வோம். இவற்றைப் பற்றி அதிகமான தகவல் நமக்குக் கிடைக்காது என்பதால் லிஸ்ட்டை மட்டும் தந்துள்ளேன். அவை என்னவென்று பார்ப்போமா?
சாயா, குமாரதேவன், வாழப்பிறந்தவன், பாகன் மகன், மக்கள் என் பக்கம், மறுபிறவி, தந்தையும், மகனும், வெள்ளிக்கிழமை, தேனாற்றங்கரை, அன்று சிந்திய ரத்தம், இன்ப நிலா, பரமபிதா, ஏசுநாதர், நாடோடியின் மகன், கேரளக்கன்னி, கேப்டன் ராஜா, வேலு தேவன், உன்னை விட மாட்டேன், புரட்சிப் பித்தன், சமூகமே நான் உனக்கே சொந்தம், தியாகத்தின் வெற்றி, எல்லைக்காவலன், சிலம்புக்குகை, மலைநாட்டு இளவரசன், சிரிக்கும் சிலை, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ, இன்பக்கனவு, நானும் ஒரு தொழிலாளி ஆகிய படங்கள் தான் அவை. இப்படங்கள் விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால் வெளியாகவில்லை.
எம்.ஜி.ஆர் வில்லனாக நடித்திருப்பாரா என்று ஐயம் தோன்றும். நடித்து இருக்கிறார். சாலி வாகனன், பணக்காரி, மாயா மச்சீந்திரா ஆகிய படங்கள் தான் அவை. சாலி வாகனன் படத்தில் ரஞ்சன் தான் கதாநாயகன். பணக்காரி படத்தில் வி.நாகையா தான் கதாநாயகன்.