More

கவினுக்கும் எனக்கும் இருப்பது பர்சனல்… சீக்ரெட் உடைத்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் பெரும் புகழ் பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில பிரபலங்கள் செம டாப்பில் பயணிப்பதும் வாடிக்கையாகி இருக்கிறது. அந்த வகையில், சீசன் மூன்றில் கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன். கொள்ளை அழகு கிறங்கடிக்கும் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினுடன் காதல் வலையில் வீழ்ந்து மேலும் புகழை பெற்றார். 

இதை தொடர்ந்து, முழு நேர நடிகையாக உருவெடுத்தார். அது அவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்று தந்தது. கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து பல போட்டோஷுட்களை செய்து இன்ஸ்டாகிராமில் படங்களை வெளியிட்டு வருவார். 

தற்போது, குகூள் குட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அதே சீசனில் பங்கேற்ற தர்ஷன் நடிக்க இருக்கிறார். அந்நிகழ்ச்சியில் லாஸ்லியாவிடம் உங்களுக்கும் கவினுக்கும் இருக்கும் உறவு குறித்து கூற முடியுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த லாஸ்லியா, கவினுக்கும் எனக்குமான உறவு பர்சனல். அதை இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனத் தடாலடியாக பதில் கொடுத்து இருக்கிறார். இதுதான் தற்போதைய சமூக வலைத்தள ட்ரெண்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Published by
adminram

Recent Posts