இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா அங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட காதல், அதை எதிர்த்த அவரின் தந்தையின் கோபங்கள் என இவராலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.எக்குதப்பாக எகிறியது.
அந்நிகழ்ச்சிக்கு பின் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரெண்ட்ஷிப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் லாஸ்லியா பாடகி அவதாரமும் எடுத்துள்ளார். ‘அடிச்சு பறக்கவிடுமா’ என்கிற பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ஜான் பால் மற்றும் ஷாம் சூர்யா என இருவர் இணைந்து இயக்கி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…