
நட்பின் பெருமை, காதலின் ஆழம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை பற்றி பேசிய இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதன்பின் 10 வருடங்கள் கழித்து தற்பொது நாடோடிகள் 2 வரவுள்ளது. இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை அதாவது 31ம் தேதி வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் சசிக்குமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் ஸ்னீக்பீக் வீடியோவாக தற்போது வெளிவந்துள்ளது.