நடிகர் சிரஞ்சீவி அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி அரசியலை விட்டு விலகிய பின்னர் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடித்த சைரா நரசிம்மா ரெட்டி மற்றும் ஆச்சார்யா படங்கள் வரிசையாக ரிலிஸாகி வருகின்றன. இந்நிலையில் தனக்கு மிகப்பெரிய ஒரு ஹிட் வேண்டும் என்பதற்காக மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். இதற்கான பணிகளும் நடந்து வந்தன. இந்த படத்தை இயக்க ஒப்பந்தமான சுஜித் இப்போது சில காரணங்களால் அந்த படத்தை விட்டு விலகியுள்ளார்.
இந்நிலையில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்திருந்தார் சிரஞ்சீவி. இந்த படம் லூசிபர் ரீமேக்குக்குப் பிறகு உருவாக இருந்தது. ஆனால் இப்போது முதலில் வேதாளம் ரீமேக்கை முடிக்கலாம் பிறகு லூசிபர் படத்தில் நடிக்கலாம் எனவும் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார். இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்க தமிழில் தயாரித்த ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம்சரணும் தயாரிக்க உள்ளார்.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…