’வலிமை’யில் மிஸ் செய்த பிரசன்னாவுக்கு அடித்த ஜாக்பாட்….

Published on: January 23, 2020
---Advertisement---

0b0bbdb9625cafff066c26f5bf8af078

அஜித் நடித்து வரும் ’வலிமை’படத்தில் பிரசன்னா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சமீபத்தில் பிரசன்னா விடுத்த அறிக்கை ஒன்றில் ’வலிமை’படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் இழந்து விட்டதாகவும் இருப்பினும் எதிர்காலத்தில் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை பெற ஆவலுடன் இருப்பதாகவும் அஜித் ரசிகர்கள் தன் மீது காட்டிய அன்புக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து ’வலிமை’படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது 

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அவர்கள் தனது டுவிட்டரில் ’வலிமை’படத்தின் வாய்ப்பு போனாலென்ன?  ’மங்காத்தா 2’ படத்தில் உங்களுக்கு கண்டிப்பாக இடம் உண்டு என்று கூறியுள்ளார். இதனை அடுத்து பிரசன்னா ’உண்மையாகவா’ என்று ’’கேட்டுள்ளார் 

 ’மங்காத்தா 2’படத்தில் முக்கிய கேரக்டரில் பிரசன்னா நடிக்க இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கோரிக்கை வைக்கப் போவதாக பிரேம்ஜி கூறியுள்ளார் எனவே  ’மங்காத்தா 2’உருவானால் நிச்சயம் அதில் பிரசன்னா இருப்பார் என்றும் அஜித்துடன் முதல் முதலாக இணைந்து பிரசன்னா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment