ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியன் 2 திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியன் 3 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஜீரோ எதிர்பார்ப்பு தான் உள்ளது.
இந்தியன் 2 படத்தின் வசூல் நிலவரத்தை ஆராய்ந்து பார்த்த லைகா நிறுவனம் இந்தியன் 3 திரைப்படம் வெளியானால் கூட லாபம் கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட நிலையில், அதிரடியாக ஷங்கருக்கு எந்தவொரு புரமோஷனையும் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.
இந்தியன் 2 படத்துக்கு துபாயில் ஸ்கை டைவிங் எல்லாம் செய்து இந்தியன் 2 பேனரை பறக்க விட்டனர். சிங்கப்பூர், மலேசியா என தனி விமானம் மூலமாக கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் புரமோஷனுக்கு சென்று வந்தனர்.
ஆனால், ஓவர்சீஸில் கொஞ்சம் கூட இந்தியன் 3 படத்துக்கு வசூல் வரவே இல்லை என்பதை அறிந்து கொண்ட லைகா நிறுவனம் இந்தியன் 3 படம் வெளி வந்தால் கூட வெற்றி பெறாது என்கிற முடிவுக்கு வந்து தேவையில்லாத செலவை ஷங்கர் செய்யத் தேவையில்லை எனக் கூறிவிட்டதாம்.
இந்தியன் 2 திரைப்படம் திங்கட்கிழமையான நேற்று இந்திய அளவில் வெறும் 3.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். வெளிநாடுகளில் 1.5 கோடி வசூல் செய்து மொத்தமாக 5 கோடி ரூபாய் வசூல் நேற்று வந்திருக்கிறதாம்.
இதுவரை இந்தியன் 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக 75 கோடி முதல் 78 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியிருக்கும் என்கின்றனர். அதிகபட்சமாக 90 கோடி லைஃப்ட் டைம் வசூல் வருமா? என்பதே சந்தேகம் தான் என்கின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…