இந்தியன் 2 புரமோஷனுக்கு கமல் வைக்கும் செலவு!.. ரத்தக் கண்ணீர் வடிக்கும் லைக்கா!..
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் 28 வருடங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்த நிலையில்தான் இபோது இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், இந்தியன் 2-வுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஏற்கனவே 2 பாடல்களும் வெளியானது. இந்த படத்தில் சித்தார்த்துக்கு முக்கிய வேடம் என சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் மகனை கொன்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடுவார் இந்தியன் தாத்தா சேனாதிபதி.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா திரும்பினால் என்ன நடக்கும் என்பது போல கதை அமைத்திருக்கிறார் ஷங்கர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இந்தியன் தாத்தா அசத்தலாக பல சண்டைகளை போடுவது போல காட்சிகளை வைத்திருக்கிறார் ஷங்கர்.
இந்தியன் 2 படம் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் கமல், சித்தார்த் மற்றும் ஷங்கர் ஆகியோர் பல ஊர்களுக்கும் போய் தீவிரமாக புரமோஷன் செய்து வருகின்றனர். இதில், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கமலும், ஷங்கரும் பதில் சொல்லி வருகிறார்கள்.
பொதுவாக அஜித் போன்ற பல நடிகர்கள் புரமோஷனுக்கு வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அதற்கு என தனி பில்லை போட்டு விடுவார்கள். ஆனால், கமல் அப்படி எதுவும் வாங்கவில்லை. ஆனால், எங்கு போனாலும் சார்ட்டட் விமானம் வேண்டும், ஜிம் பாய்ஸ் சுற்றி இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறாராம்.
மேலும், விமானத்தில் இறங்கிய பின் நிகழ்ச்சி துவங்க இன்னும் ஒரு மணி நேரம் இருந்தாலும் நட்சத்திர ஹோட்டலில் தனி சூட் ரூம் போட்டு கொடுக்க வேண்டும் என சொல்கிறாராம். இதற்கே பல லட்சங்கள் என்பதால் இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் ரத்தக்கண்ணீர் வடிப்பதாக சொல்லப்படுகிறது.