வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. சிம்பு உடல் எடை கூடி குண்டாக இருந்த போது துவங்கிய படப்பிடிப்பு அவர் உடலை இளைத்து மெலிதாகிய மாறிய பின் முடிவடைந்துள்ளது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், பிரேம்ஜி, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வந்தது.
இந்நிலையில், இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் வெளியாகவுள்ளது. அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆனால், ரஜினிக்கு போட்டியாக சிம்புவின் ‘மாநாடு’ வெளியாவது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…