அரசியல்ல இதலாம் சாதாரணமப்பா...துருவ் விக்ரமை ஒதுக்கிவிட்டு உதயநிதியை டிக் அடித்த மாரி செல்வராஜ்!
பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி பெரும் புகழ் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். சாதி கொடுமைகளை மைய கருவாக கொண்டு வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதையடுத்து தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார்.
அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடிய ஒரு கபடி வீரரின் பயோபிக் படத்தை துருவ் விக்ரமை வைத்து மாரி செல்வராஜ் படம் இயக்குவதாக ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன் ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் ஆரம்பமான நேரத்தில் "மீண்டும் நானும் மாரி செல்வராஜும் இணையவிருக்கிறோம்" என தனுஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
துருவ் விக்ரம் படத்தை எடுத்துவிட்டு பின்னர் தனுஷ் படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜிடம் தனக்கு ஒரு படம் பண்ண சொல்லி கேட்க அரசியல் ஜெயித்துவிட்டது. ஆம் துருவ் விக்ரம் மற்றும் தனுஷை ஓரங்கட்டிவிட்டு உதயநிதிக்கு முன்னிமை கொடுத்து படத்தின் வேளைகளில் இறங்கிவிட்டாராம் மாரி செல்வராஜ். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நடிக்கும் கடைசி திரைப்படம் அது தானம்.