உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் வாக்கெடுப்பின் மூலம் வெளியேற்றப்பட்டாலும் சரவணன், மதுமிதா ஆகிய இரண்டு போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் நிர்வாகத்தினரால் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தெரிந்ததே
பிக்பாஸ் போட்டியாளரான சரவணன் தனது கல்லூரி காலத்தில் பெண்களை கிண்டல் செய்ததாக கூறிய சம்பவத்தின் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டி ஒன்றில் கத்தியால் தனது கையை கீறி தற்கொலைக்கு முயன்றதாக மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சரவணன், மதுமிதா ஆகிய இருவரும் தற்போது இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் இருவரும் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்றும் பெரும் ஆதரவைப் பெற்ற முகின், தர்ஷன் உள்பட பலருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் சரவணன் மற்றும் மதுமிதாவுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…