பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் படம்.. முக்கோண காதலில் உருவாகும் படம்.!
தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் ஒரு முக்கியமான கேரக்ட்டரில் நடித்து அசத்தியிருப்பார் மஹத். அதற்கு முன்னதாகவே இவர் வல்லவன், காலி ஆகிய படங்களில் நடித்திந்தாலும் மங்காத்தா படம்தான் இவரை ஓரளவிற்கு நினைவில் நிற்க வைத்தது.
இதன்பின் விஜய்யுடன் ஜில்லா, பிரியாணி, வந்தா ராஜாவாத்தான் வருவேன் என பல படங்களில் சிறு சிறு ரோலில் நடித்திருந்தார். சினிமாவைவிட பிக்பாஸ் 2வில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிகிப்ஸ வீட்டில் இருக்கும்போது யாஷிகா ஆனந்தத்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா மூவரும் இணைந்து அடித்த லூட்டிகள் அளவுமீறி சென்றதாக அனைவரும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்போது மஹத், ஐஸ்வர்யா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.
சிம்புவின் நண்பரும், தீவிர ரசிகருமான இவர் சிம்பு படத்தின் பாடல் வரியான 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' என்பதை இந்த படத்திற்கு பெயராக வைத்துள்ளார். பிரபுராம் என்பவர் இயக்கிவரும் இப்படத்தை ஆர்.டி,மதன்குமார் தயாரிக்கிறார்.
இதில் வில்லனாக புதுமுக நடிகர் ஆதவ் என்பவர் நடிக்கிறார். ஆதவ், ஐஸ்வர்யா, மஹத் மூன்றுபேருக்கும் இடையேயான முக்கோண காதலைப் பற்றியதுதான் இந்தப்படம். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

யாஷிகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட மஹத்,யாஷிகாவின் தோழியான ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடித்துவருவது தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக உள்ளது. இந்தப்படம் தவிர காதல் கண்டிஷன் அப்ளை என்ற படத்திலும் மஹத் ஹீரோவாக நடித்து வருகிறார்.