Connect with us

மக்களின் மனங்களைக் கவர்ந்த மகாராசன்!

மக்களின் மனங்களைக் கவர்ந்த மகாராசன்!

மக்களின் மனங்களைக் கவர்ந்த மகாராசன்!

cfbbc1faaae2fd762493ec77f4cb3b9b-1

1993ல் வெளியான படம் மகாராசன். கமல்ஹாசன், பானுப்ரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், வி.கே.ராமசாமி, வினுசக்கரவர்த்தி, சந்திரசேகர், ராகவி, ரமேஷ் அரவிந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். 

கமல்ஹாசன் படம் முழுவதும் சென்னை தமிழ் பேசி கலக்கியிருப்பார். கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தான் சென்னைத் தமிழ் பேசுவதை லூஸ் மோகனிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன் என்றார். அப்படி என்றால், அவர் கலையை எவ்வளவு தூரம் நேசித்து இருப்பார் என்று பாருங்கள். 

இவர் பெரியவர். இவர் சிறியவர் என கலைஞரில் அவர் யாரையும் பார்த்தது இல்லை. ஒவ்வொருவரிடம் தனிப்பட்ட திறமை உண்டு. அதை எப்படி வெளிக்கொணர்வது என்பதிலேயே அவர் குறியாய் இருந்தார். அந்தவகையில் அவர் தன்னை விட சிறிய நடிகராக இருந்தாலும் அவரிடம் இருந்தும் தான் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்றே விரும்புவார். 

இப்படித்தான் சதிலீலாவதி படத்தில் கூட தனக்கு இணையான ஜோடியாக காமெடி நடிகை கோவைசரளாவையே எவ்வித பாகுபாடும் பார்க்காமல் நடிக்க வைத்துள்ளார். 

ஒரு கலைஞன் என்றால் அவன் விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதவனாக இருக்க வேண்டும் என்றும் தனது நடிப்புக்காக எதையும் செய்யத் தயங்காதவர் என்றும் பல சமயங்களில் நிரூபித்தவர் தான் கமல்ஹாசன். 

எவ்வளவு இடர்பாடுகள் வந்தபோதிலும் உதறித்தள்ளிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுவதில் தான் முழு ஈடுபாட்டுடன் இருப்பார். அதனால் தான் அவரை கலைஞானி என்று அழைக்கின்றனர். அது இருக்கட்டும். மேட்டருக்குச் செல்வோமா..! 

மகாராசன் கதை தான் என்ன? 

3acabd1a6dee1359540a7d71115f98c7

குப்பத்தில் நல்லது செய்து வாழ்கிறார் மகாராசன். தனது தங்கை பணக்காரரின் மகனை மணம் செய்கிறாள். பணக்காரரின் ஜோதிட நம்பிக்கையால் வாரிசுக்குழப்பம் உண்டாகிறது. 

இந்த பிரச்சனையை கமல் எவ்வாறு தீர்த்து வைக்கிறார்? உண்மையான வாரிசு யார்? என்பதே படத்தின் கதை. 

ஜி.எம்.ரங்கராஜன் தயாரித்து கதை எழுதி இயக்கியுள்ளார். 

இப்படம் வந்த புதிதில் மெட்ராஸ் பாஷை என்றால் அனைவரும் அதிசயமாகப் பார்த்து ரசித்தனர். கமல் அதை அல்வா சாப்பிடுவது மாதிரி தூக்கி சாப்பிட்டு இருப்பார். படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது அவரது வசனங்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு யதார்த்தம். அவ்வளவு காமெடி. அவ்வளவு ரசனை அதில் இருக்கும். படத்தில் கவுண்டமணி, செந்தில் நடித்து இருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட். 

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரும் தீனி. படத்தின் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகங்கள். குமரி முத்து சட்டையை அயர்ன் பண்ணும்போது பாட்டு பாடிக் கொண்டே அயர்ன் செய்வார். அப்போது சட்டை எரிந்து ஓட்டை விழுந்து விடும். அப்போது கவுண்டமணி வந்து சட்டையை வாங்க வருவார். என்ன இப்படி பார்க்குற..என்பார். என் முழியே அப்படி தாங்க என்பார். அந்த முழில புளிய வச்சு அடைடா. வி.கே.ராமசாமி ஒரு சட்டையைத் தேய்ச்சி வாங்கியாறதுக்கு இவ்வளவு நேரமாடா என்பார். சட்டையா இது சர்க்கஸ் கூடாரம் மாதிரி இருக்கு…என்பார். வி.கே.ராமசாமி சட்டை ஓட்டை விழுந்ததைப் பார்த்ததும் குமரி முத்துவிடம் இருவரும் வந்து கலாட்டா செய்கின்றனர். அவரது வண்டியை எட்டி உதைத்து விடுகின்றனர். 

குமரி முத்து உடனே கமல், வடிவேலு அன்கோவை அழைத்து வருகிறார். யார்ரா அவன் வண்டிய ஒடைச்சது? வெளியே வாடா சோமாரி, கேப்மாரி, மொள்ளமாரி என கமல் கலாய்க்க, வி.கே.ராமசாமியிடம் தகராறு செய்கிறார். செய்றதையும் செஞ்சிட்டு உள்ளே ஒக்காந்திருக்கிறீயே வெளிய வாடா என்கிறார் கமல்.

யோவ் சோறு போட்ற லெட்சுமிய எட்டி ஒதைச்சிட்டியே. அது எட்டி ஒதச்சி படாத இடத்துல பட்டு உடைச்சி போட்டியடா…எந்த லட்சுமி என்கிறார் வி.கே.ராமசாமி. அவரோட இஸ்திரி பெட்டி என்கிறார் கமல். உடனே வி.கே.ராமசாமி அவர் செஞ்ச காரியத்துக்கு இவர் தான் எனக்கு துட்டு தரணும்ங்கறார். 

உடனே கமல் அவரது கார் கண்ணாடியை உடைக்கிறார். நீ  துட்டு தராதுக்கண்டி வண்டில தொண்டி அம்பாசிடர் வண்டி அடிக்குதுபார் நொண்டி என கமல் நொண்டி டான்ஸ் ஆட, அடடடா…எங்கிருந்து வருது இவ்ளோ ரைம் என கமலை பாராட்டுகிறார். வாயிலருந்து தான்டா பேமாளி…உருட்டிண்டு போடா என வடிவேலுவைப் பார்த்து கமல் சொல்ல படத்தின் காட்சிகளில் வரும் தொடர் காமெடி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. 

குப்பத்துக்கு ஓட்டு கேட்டு வரும் வி.கே.ராமசாமியிடம் கைல காசு வாய்ல தோசை என பணம் கேட்கிறார் கமல். இப்பத்தான் உங்களுக்கு எல்லாம் இங்குள்ள மனுஷாலுங்கள தெரிஞ்சுதா எனவும் அரசியல்வாதிகளை சூசகமாக நக்கல் செய்கிறார். உங்ககிட்ட பணம் வாங்கித்தான் நாங்க எங்க குப்பத்து ஜனங்களுக்கு சின்னதா ஒரு பாத்ரூம் கட்டலாம்னு இருக்கேன் என்கிறார். அப்போதே திறந்த வெளி கழிப்பறையை தவிர்க்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையை விதைத்திருக்கிறார்.

bdf029b84deb8198dda8f48e6a98d95d

இப்போது அது மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. அதே போல கமலிடம் செந்தில் கோழிக்கறி வாங்க வருகிறார். ஒரே கோழியை 2 கிலோ வேணும் என கேட்கிறார். அந்த காமெடியை நீங்கள் படத்தில் பாருங்கள். வாழைப்பழ காமெடியை மிஞ்சி விடும் போல. அந்த அளவு நம்மை ரசிக்க வைக்கிறது இந்த காமெடி. இந்த காமெடியிலும் செந்தில், கவுண்டமணி கூட்டணி வந்து விடுகிறது. 

படம் முழு நீள காமெடி என்பதால் இப்போது பார்த்தாலும் ரசிக்க முடிகிறது. படம் வந்த புதிதில் அந்த அளவு எதிர்பார்ப்பு இல்லை. லேட் பிக்கப் தான்.  கறிக்கடை வடிவேலுவாக வரும் கமல் கிடா மீசையுடன் படம் முழுவதும் வந்து செம கலாய் கலாய்க்கிறார். 

அரச்சு அரச்சு, அவனா இவனா, எந்த வேலு வந்தாலும், ராக்கோழி கூவும், ராசா மகாராசா…எங்க மகாராசா என பாடல்கள் அத்தனையும் பட்டையைக் கிளப்புகின்றன. பானுப்பிரியாவுக்கும் படத்தில் செம நடிப்பு. கமலுடன் போட்டி போட்டு டான்ஸ், நடிப்பு, காமெடி என பின்னியிருக்கிறார். 

Continue Reading
To Top