Categories: latest news

மெகாஸ்டார் மம்முட்டிக்கு மேலுமொரு மணிமகுடம்!.. பாடப் புத்தகத்திலேயே வந்துட்டாரே!..

மலையாள சினிமாவின் ’மெகாஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகர் மம்முட்டி தனது 50 வருடங்களுக்கு மேலான சினிமா பயணத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், அவரது இத்தனை ஆண்டுக்கான உழைப்பிற்கு சிறந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது.

வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று திரைப்படத் துறையில் நுழைந்த மம்முட்டி 1971ஆம் ஆண்டு அனுபவங்கள் பாலிச்சகள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். நியூ டெல்லி, ஒரு சிபிஐ டைரி குறிப்பு போன்ற படங்களில் நடித்தது அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்து முன்னணி நடிகராக உயர்த்தியது. மேலும், வதக்கன் வீரகதா, விடியும் வரை, பொந்தன் மாட, ஆதி ஆத்மா, பிரான, புழு உள்ளிட்ட பல படங்களில் நடித்து சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார்.

மம்முட்டி தனது “பிளேஹவுஸ்” மற்றும் “மம்முட்டி கம்பெனி” மூலம் பல படங்களைத் தயாரித்து வருகிறார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், மம்முட்டிக்கு புற்றுநோய் இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால், அவை தவறானவை அவர் ரம்ஜான் நோன்பு காரணமாக ஓய்வில் இருக்கிறார் என்று தெரிவித்தனர். மேலும், தற்போது மம்முட்டி பசுக்கா, கமல்கவல், பேட்ரியாட் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மம்முட்டியின் ஐந்து தசாப்த கால திரைப்பயணம், கேரளாவின் மஹாராஜா கல்லூரியில் BA வரலாறு பாடத்திட்டத்தில் History of malayalam cinema என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. இது அவரது சினிமா பங்களிப்புக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரமாகும். இந்த கௌரவத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகிறார். லக்கி பாஸ்கரை தொடர்ந்து அவர் நடித்து வரும் காந்தா திரைப்படத்திற்காக பலரும் காத்திருக்கின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

59 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

1 hour ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

1 hour ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

15 hours ago