இருவர் படத்திற்காக போட்டோஷூட் வரை சென்றும் நடிக்காத மம்முட்டி: வைரலாகும் புகைப்படம்

by adminram |

de2fb8bfa4ae6add5148d0b4114df4c5

1997ம் ஆண்டு வெளியான படம் இருவர். பிரகாஷ்ராஜ்,மோகன்லால், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர், கருணாநிதி நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக பார்த்தால் மணிரத்னத்திற்கு நஷ்டத்தையே கொடுத்தது.

e99267bd62e3a5b5fae9479ec35f5c79

இருவர் படத்தில் பிரகாஷ்ராஜ் வேடத்தில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா? முதலில் மெகாஸ்டார் மம்முடித்தான் நடிக்கவிருந்தார். அதற்கான போட்டோஷூட் நடைபெற்றுள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ மம்முட்டி அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் ஆனார். அப்படத்திற்காக மம்முட்டியை வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Next Story