4 சடலங்களுடன் வசித்த மனிதன் – அழுகிய நிலையில் கைப்பற்றப்பட்ட உடல்கள் !

அமெரிக்காவின் புளோரிடா மாகாணாத்தில் வசித்து வந்த ஆண்டனி என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று மகன்களைக் கொலை செய்து அவர்களின் சடலத்தோடு இரு வாரங்களுக்கு மேல் வசித்து வந்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவர் தன்  மனைவி மேகன் மற்றும் அலெக்ஸ், டைலர் மற்றும் ஜோ என்ற மூன்று மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது குடும்பத்தில் இருந்து யாருடனும் நீண்ட நாட்களாக பேசவில்லை என அவரது சகோதரி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது ஆண்டனி மட்டுமே இருந்துள்ளார். அவரது பேச்சினால் சந்தேகமடைந்த அந்த பெண், போலீஸாரிடம் இதுபற்றி புகாரளித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று போலிஸார் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஆண்டனியின் வீட்டை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அனைவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் விதமாக ஆண்டனி தனது மகன்கள் மற்றும் மனைவியின் அழுகிய சடலங்களோடு இருந்துள்ளார். இதையடுத்து ஆண்டனியைக் கைது செய்த போலிஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஆண்டனியிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Published by
adminram