வேற லெவல் சாதனை... யுடியூப்பில் ஹிட் அடித்த ‘மாங்கல்யம்’ பாடல்...
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இப்படம் ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா, முனிஷ்கந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக வெளியானது. சிம்புவுக்கு ஜோடியாக நித்தி அவர்வால் நடித்திருந்தார். இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில், ‘மாங்கல்யம்’ பாடல் யுடியூப்பில்
150 மில்லியன் (ஒன்றரை கோடி) பார்வைகளை தாண்டி சென்றுள்ளது. இதையடுத்து டிவிட்டரில் #150MviewsforMangalyam என்ற ஹேஷ்டேக்கில் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இப்பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Throwback
Cook With Comali Fame @sivaangi_k & @Pugazh_VijayTv 's Reels For Mangalyam Song #150MviewsforMangalyam#SilambarasanTR #Maanaadu@SilambarasanTR_ @MusicThaman @AgerwalNidhhi @thinkmusicindia pic.twitter.com/3hcOw5q6j6
— NaTaRajan STR (@natzSTR) August 22, 2021