பிப்ரவரி 7ல் வெளியாகும் மணிரத்னம் திரைப்படம்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Published on: January 29, 2020
---Advertisement---

5737751118b77d83c557c51e398abeed

மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் அவரது தயாரிப்பில் உருவாகிவரும் ’வானம் கொண்டடும்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே டீசரில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தற்போது அந்த தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

மணிரத்தினம் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் என்ற நிறுவனத்தில் மணிரத்னம் இயக்காத ஒரு திரைப்படம் 18 ஆண்டுகள் கழித்து வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்காத திரைப்படம் என்றால் அது கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த ’பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படம்தான் என்பதும் இந்த படத்தை சுசிகணேசன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த அனைத்து படங்களையும் மணிரத்னம் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தனா என்பவரின் இயக்கத்தில் சித் ஸ்ரீராம் இசையில் உருவாகிய இந்த படத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல், மதுசூதன ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Leave a Comment