More

தன் படங்களை தானே பார்க்காத மணிரத்னம்!.. இது என்னடா கொடுமையா இருக்கு!…..

தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். இன்னும் சொல்லப்போனால் இந்திய சினிமாவின் முகமாக இருப்பவர். இவரின் திரைப்படங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் சினிமா விழாக்களில் பலத்த கைதட்டல்களை பெறுவதுண்டு.,

Advertising
Advertising

காதல், தீவிரவாதம், பகை, குழந்தைகளின் உலகம், சாதி, தேசிய பிரச்சனைகள் என புதிய புதிய கதை கருக்களை திரைப்படங்களாக உருவாக்கி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர். தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய மௌன ராகம், நாயகன், ரோஜா, பம்பாய், தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், அலை பாயுதே உள்ளிட்ட படங்களே பலருக்கும் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையை எற்படுத்தியது. தற்போதுள்ள இயக்குனர்கள் பலருக்கும் ஆசானாக அவர் இருக்கிறார்.

தற்போது பலரும் தொட தயங்கிய மற்றும் எடுக்க முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, அமலாபால் என பெரிய நடிகர், நடிகையர் பட்டாளமே நடித்து வருகிறது.

பொதுவாக ஒரு இயக்குனர் தனது திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் போது ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்காக தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக அவர்கள் உருவாக்கிய திரைப்படத்தை பார்ப்பதுண்டு. ஆனால், மணிரத்னம் இதுவரை தான் இயக்கிய படங்களை தியேட்டரில் சென்று பார்த்ததே இல்லையாம். சமீபத்தில் இதை தெரிவித்த மணிரத்னம் ‘ தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் போது நான் செய்த தவறுகள் எனக்கு தெரிந்துவிடும். அதனால்தான் நான் அங்கு சென்று பார்ப்பதில்லை’ என கூறியுள்ளார். 

ஒருபக்கம் இது விசித்திரமாக இருந்தாலும் தான் இயக்கிய திரைப்படங்களில் குறை இருந்தால் அதை ஏற்காத இயக்குனர்கள் மத்தியில், இவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தும் தன் குறை தனக்கு தெரிந்துவிடும் என மணிரத்னம் கூறுவதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். 

Published by
adminram

Recent Posts