More

மணிரத்னம் மனசுக்குள் ஒரு அஞ்சலி பாப்பா… மனுசன் இப்படியா யோசிப்பாரு!….

அஞ்சலி…

அஞ்சலி படத்தில் ஒரு சுவாரசிய நிகழ்வு..பெரிய திரைக்கதாசிரியர் ரெண்டு பேர் நகைச்சுவையா பழிவாங்கணும்னா என்ன செய்வாங்க..?

அஞ்சலி படத்திற்கு முன்பு நாயகன் முதலான படங்களுக்கு மணிரத்னம் தான் திரைக்கதை எழுதினார். ஆனால் அஞ்சலி படத்தின் திரைக்கதையை ஒரு பெரிய திரைக்கதாசிரியரை வைத்து எழுத நினைத்த அவர் அணுகியது மலையாளத்தின் முன்னணி கதாசிரியர். அவர் பல ஹிட் படங்களின் கதாசிரியர். நாயர்சாப், நிறக்கூட்டு, நியூடெல்லி போன்ற ஹிட் படங்களின் கதை, திரைக்கதை அவருடையது தான்.

சுஹாசினி அவரை அழைத்து “நண்பர் மணி(அப்போது நண்பர் தான்) உங்களை சந்திக்க விரும்புகிறார். நேரம் கிடைக்குமா?” எனக்கேட்க அவரோ அதிசயித்து போகிறார். நாயகன் போன்ற படங்களை இயக்கிய மணியா?

இரண்டு பேரும் சந்திக்கின்றனர். அப்போது மணி ‘அடுத்த ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்து ஒரு படம் எடுக்கப்போகிறேன். நீங்கள் திரைக்கதை எழுதி தரமுடியுமா?” எனக்கேட்டதும் மலையாளக்கதாசிரியர் ஆடிப்போனார். மிகச்சிறந்த திரைக்கதாசிரியர் தானே மணி..

“என்னக் காரணத்துக்காக என்னை உங்கள் படத்துக்கு எழுத அழைக்கிறீர்கள்?”

“இந்தியாவின் கமர்சியல் திரைப்படங்களில் நம்பர் ஒன் ஷோலே..சரியா?”

“ஆமாம்..சிறந்த இரண்டாவதாக நான் நினைப்பது நீங்கள் எழுதிய ‘நியூ டெல்லி’ திரைக்கதை தான்”

இதைக்கேட்டு அசந்து போன அந்த மலையாளத்திரைக்கதாசிரியர் சம்மதித்தார். இருவரும் பல இடங்களில் சந்தித்து பேசி கதையை வளர்த்துக்கொண்டே போனார்கள். திரைக்கதை வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஒரு ஜோஷி படத்திற்கு எழுத அந்த கேரள திரைக்கதாசிரியருக்கு வாய்ப்பு வந்தது. அதுவும் மம்முட்டி, மோகன்லால் இருவருக்காகவும்.

மணியிடம் குட்பை சொல்லிவிட்டு எஸ்கேப்பானார் கேரள கதாசிரியர். மணிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அஞ்சலியை உதறிவிட்டு அவர் மலையாளத்தில் எழுதிய ‘No.20 மெட்ராஸ் மெயில்’ என்கிற அப்படம் பயங்கர ஹிட்.

சில மாதங்களுக்கு பிறகு அஞ்சலி ரிலீஸ். அப்போது அந்த கதாசிரியரியரை போனில் தொடர்பு கொண்டார் மணிரத்னம்.

“அஞ்சலி படம் ரிலீசாகி இருக்கிறது. படத்தை பாருங்கள். அதில் உங்களை பழி தீர்த்து விட்டேன்” என சொல்ல இவரும் போய் படத்தை பார்க்கிறார்.

படத்தில் ஒரு கதாபாத்திரம் வரும். கொலை செய்துவிட்டு சில வருடம் சிறையிலிருந்துவிட்டு விடுதலையாகி தனியே வாழும் கொலைகார பிரபு. அவர் இல்லாத போது அவர் வீட்டினுள் போய் ஆராயும் குழந்தைகள் ஒரு பேப்பரை எடுத்துப்படிப்பார்கள்.

“செங்கல்பட்டை சேர்ந்த டென்னிஸ் ஜோசப் என்கிற நபர்…ஏய்..அவன் பெயர் டென்னிஸ் ஜோஸப்…பெரிய கொலைகாரனாம்…” என்கிற சீனை பார்த்து பழிவாங்கப்பட்ட அந்த திரைக்கதாசிரியர் ‘டென்னிஸ் ஜோசப்’ வாய்விட்டு சிரித்துவிட்டார். 

ஆனாலும் ஒரு கொலைகார கேரக்டருக்கு தன் பெயரை வைத்த மணியோடு நட்பு தான் டென்னிஸுக்கு.

அஞ்சலி குழந்தைகளை விட சின்னப்புள்ளத்தனமா இருக்கிறதல்லவா மணிரத்னம் செயல்….பழி வாங்கிட்டாராம்…

எவ்ளோ பெரிய ஆளுக்குள்ளேயும் ஒரு அஞ்சலிப்பாப்பா மனசு இருக்கத்தான் செய்யுது…..

முகநூலில் இருந்து செல்வன் அன்பு..
 

Published by
adminram

Recent Posts