எங்களை மன்னிச்சுடுங்க – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சந்தானம் பட இயக்குனர்

இப்பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் சந்தானம் நடித்த ‘டகால்டி’ திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் 2 திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என செய்தி வெளியானது. ஆனால், அந்த தேதியில் டகால்டி மட்டுமே வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் பால்கி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எங்கள் படம் வெளியீட்டு தேதி குறித்து தவறான தேதிகளை கூறியதற்காக வருந்துகிறோம். பிரச்சனைகள் தீர்ந்து விட்டதாக நினைத்தே நான் படத்தின் புரமோஷனில் பங்கெடுக்குமாறு சந்தானம் மற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களிடம் கூறினேன். ஆனால், சிலரின் தவறு காரணமாக நாங்கள் இந்த பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. விரைவில் அறிவிக்கிறோம். மன்னித்து விடுங்கள்’ என டிவிட் செய்துள்ளார்.

Published by
adminram