">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மனுசன் எவ்ளோ சீரியஸா சொல்லி இருக்காரு.. மோடியின் டிவிட்டுக்கு இவ்ளோ லைக்கா?
சமூக வலைத்தளங்களிலிருந்து தான் வெளியேறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
பிரதமர் மோடி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ வரும் ஞாயிறு முதல் சமூக வலைத்தளங்களான டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் யுடியூப் ஆகியவற்றிலிருந்து வெளியேறுவது குறித்து யோசித்து வருகிறேன்’ என டிவிட் செய்திருந்தார்.
இதைத்தொடந்து மோடிக்கு எதிரானவர்கள் இதை வரவேற்றும், ஆதரவாளர்கள் ‘வேண்டாம் போகாதீர்கள்’ என கெஞ்சியும் டிவிட் செய்து வருகின்றனர்.அதேபோல் ‘வெறுப்பை கை விடுங்கள்.. சமூக வலைத்தளங்களை அல்ல’ என ராகுல் காந்தி மோடிக்கு அறிவுரை செய்திருந்தார்.
அதே நேரம், மோடியின் இந்த டிவிட்டை இதுவரை ஒன்றை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 44 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ மனுசன் எவ்வளவு சொல்லி இருக்காரு. இப்படி லைக் கொடுத்து வச்சிருங்கீங்க.. ரொம்ப வொர்ஸ்டுடா நீங்க’ என அதையும் கிண்டலடித்து வருகின்றனர்.
This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & YouTube. Will keep you all posted.
— Narendra Modi (@narendramodi) March 2, 2020