ரஜினியுடன் ஏன்டா நடித்தோம் என பலமுறை யோசித்தேன் – ரம்யா கிருஷ்ணன் ஒப்பன் டாக்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ‘படையப்பா’. இப்படத்தில், பணக்கார  மற்றும் திமிர் பிடித்த பெண் வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருப்பார்.  ரஜினி முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து வசனம் பேசுவார். எனவே ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கும் ஆளானார்.

இந்நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் நடத்தும் ‘கோடீஸ்வரி’ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது, படையப்பா படத்தில் நடித்த அனுபவம் பற்றி ராதிகா கேட்டார். அதற்கு ரம்யா கிருஷ்ணன் ‘ இந்த படத்தில் ஏண்டா நடித்தோம் என ஒவ்வொரு நாளும் நான் யோசித்தேன். அப்படத்தில் நான் பேசிய வசனங்கள் ஓவ்வொரு நாளும் டென்ஷனாகவே இருந்தது. என் வீட்டிலோ அல்லது காரிலே ரஜினி ரசிகர்கள் கல் எறிவார்கள் என பீதியாகவே இருந்தது. இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி முடிந்த பின் ‘ஒரு மாதத்திற்கு எங்கேயாவது போய்விடுங்கள்’ என ஒரு ஜூனியர் நடிகர் என்னிடம் கூறினார். இதனால் நான் மிகவும் பயந்து விட்டேன்.

என் தங்கை ஆல்பர் தியேட்டரில் இப்படத்தை பார்க்க சென்றார். ஒரு காட்சியில் ரசிகர் ஒருவர் திரையில் கல்லை எறிந்து ஓட்டையாகி விட்டது. இதைக்கண்டதும் என் தங்கை அங்கிருந்து ஓடி வந்து விட்டாள். அதன்பின் எல்லாம் மாறிவிட்டது’ எனக்கூறியுள்ளார்.

Published by
adminram