தமிழ் சினிமாவில் பரம்பரை வைத்து பல படங்கள் வெளியாக விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெறாமல் போகும். ஆனால், சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி, நடிகர் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்து வெற்றி பெற்று வரும் படம் சார்ப்பட்டா பரம்பரை.
கோபம், அழுகை, பாசம், காதல் என ஒவ்வொரு உணர்வுகளையும் துல்லியமாக வெளிப்படுத்தியிருந்தார் மாரியம்மா துஷாரா விஜயன்.
இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் நான் எப்படி நுழைந்தேன் என்றும் மாரியம்மா கதாபாத்திரத்தை பற்றியும் சமீபத்தில் நடிகை துஷாரா இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தோடு பதிவு ஒன்றினை போட்டுள்ளார். எல்லா கனவுகளும் நிஜம் ஆகுமான்னு என்ன கேட்டா எனக்கு தெரியாது,
ஆனா ஜூலை 22, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகிருச்சு. சார்ப்பட்டாவின் வெற்றி இது. என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாத வெற்றி! எல்லாரும் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னப்ப இவதான் மாரியம்மானு ஆணி தனமா நம்புன ரஞ்சித் ஐய்யாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை போதும், எத வேணும்னாலும் பன்னிரலாம் என்றும் கூறியிருந்தார்.
படத்துல நடிச்ச எல்லாருமே அவங்க நடிப்பு கொண்டாடப்படனும்னு தான் நடிச்சு இருக்கோம். துணை எழுத்தாளர் தமிழ் பிரபா அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லனும், அவ்வளவு சரளமாக நான் வடசென்னை பேச்சு வழக்கு பேசுறதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்.
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…