ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு! கேஜிஎஃப் – 2 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ்…

கேஜிஎஃப் கன்னட சினிமா உலகில் முதல் ரூ.100 கோடி வசூல் செய்த  முதல் திரைப்படமாகும். கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் ரூ.250 கோடிக்கும்  மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான கேஜிஎஃப் -2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.  தற்போது 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது. அதேபோல், அடுத்த வரும் கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Published by
adminram