மாஸ்டர் படத்தில் குடிநோயாளியாக விஜய்.. ‘கொய்ட் பன்னுடா’ பாடல் வீடியோ

by adminram |

5b1b0d53b306e11c1933aeeaf37dfa74

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் பரவல் மாஸ்டர் படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது.

இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்களின் வரி வீடியோ ஏற்கனவே வெளியாகி விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கொய்ட் பன்னுடா’பாடல் வரிகள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Next Story