யாரை எச்சரிக்கின்றார் விஜய்? மாஸ்டர் படத்தின் செகண்ட்லுக்

Published on: January 16, 2020
---Advertisement---

46eb976a46c3c088a81f11fa456275bb

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அட்டகாசமாக வெளியாகியுள்ள இந்த செகண்ட் லுக் போஸ்டரில் கருப்பு கண்ணாடி மற்றும் கருப்பு உடை அணிந்த விஜய், சுற்றியுள்ள இளைஞர்களை பார்த்து வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கவும் என்று எச்சரிப்பது போல் ஒரு செய்தி இருப்பதாக தெரிகிறது 

இந்த எச்சரிக்கை சுற்றி உள்ள இளைஞர்களுக்கு மட்டுமா? அல்லது தன்னுடைய எதிரிகளுக்குமா? என்பதை படம் பார்த்தால் புரியவரும். ஆக மொத்தம் விஜய் ரசிகர்கள் இந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர் 

ஆனாலும் விஜய் சேதுபதி இந்த போஸ்டர்களில் இல்லை என்பதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அவர்களை திருப்தி செய்ய இன்னொரு போஸ்டர் நாளை வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Comment