செம ஸ்டைல்.. செம மாஸ்... தெறிக்கும் மாஸ்டர்... டிவிட்டர் விமர்சனம்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து இன்று காலை வெளியான திரைப்படம் மாஸ்டர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
Equal screen presence for @actorvijay & @VijaySethuOffl.Engaging screenplay,@Dir_Lokesh strikes right chord. @anirudhofficial bgm #MasterFDFS #MasterPongal
— Aravind kumar (@aracityboyz) January 12, 2021
இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் பலரும் படம் சிறப்பாக இருப்பதாகவும், விஜய் மிகவும் அழகாக இருப்பதாகவும், ஸ்டைலாக நடித்திருப்பதாகவும், மாஸ் காட்டியிருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் விஜய் அடித்து தூள் கிளப்பியிருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.
#Master is a Modern Commercial MASTERPIECE. @Dir_Lokesh vision is unbelievable. #Vijay’s attitude is outstanding and VJS is the Most DEADLIEST Villain in recent time. #Anirudh prove again that he is the King. Story & Screenolag THERI.
BLOCKBUSTER #MasterFDFS #MasterFilm
— Tamil Censor (@Tamil_Censor) January 12, 2021
அதேபோல், விஜய் சேதுபதி செமயாக நடித்திருப்பதாகவும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை,திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்திருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
அதோடு, விஜய்க்கு மாஸ்டர் கண்டிப்பாக ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
#MasterFDFS done in INDIA. No doubt it's not the classiest & most stylish Vijay movie in recent years. @actorvijay super powerful performance !! @Dir_Lokesh aces with his script @ screenplay . And @VijaySethuOffl nails his role. Overall, #MasterFilm audience kolamass !!
— Rajan AM (@imRajan8_) January 13, 2021