More

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா – ரசிகர்களை காப்பாற்றுவாரா விஜய்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

Advertising
Advertising

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்துவது என படக்குழு முடிவெடுத்துள்ளது. விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், மைதானம் மற்றும் கல்லூரி என்றால் விஜய் ரசிகர்கள் அதிகம் கூடமுடியும். ஆனால், இது நட்சத்திர ஹோட்டல் என்பதால் அதிகம் பேர் அங்கே கூட முடியாது. எனவே, இசை வெளியீட்டு விழா எப்படி நடக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும், பிகில் இசை வெளியீட்டு விழாவின் போது தன்னுடைய ரசிகர்கள் மேல் போலீசார் தடியடி நடத்தியது போல் இந்த முறையும் நடக்கக்கூடாது என கருதும் விஜய், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டாம் என தனது ரசிகர்களை அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இதை அறிக்கையாக வெளியிட்டால் நல்லது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts