">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மாஸ்டர் ரிலீஸ் ஆகல!.. துக்கம் தொண்டைய அடைக்குது.. இயக்குனரின் சோக டிவிட்
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி எப்போது முடிவடைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்பது தெரியவில்லை. �
இதில் விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா காரணமாக இப்படம் வெளியாகவில்லை. எனவே, விஜய் ரசிகர்கள் பலரும் சோகத்தையூம், ஏமாற்றத்தையும் டிவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கொரானா ஊரடங்கு இல்லாமல் இருந்திருந்தால் ‘மாஸ்டர்’ இந்நேரம் வெளியாகியிருக்கும். இது தொடர்பாக பல சோகமான பதிவுகளை பார்க்கிறேன். ஒரு ரசிகனாக இது பெரிதும் காயப்படுத்துகிறது. போராட்டம், வருமான வரி சோதனை, இப்போது கொரோனா. ஆனாலும் விரைவில் மாஸ்டர் வெளியாகும். இப்போது வாழ்வதே முக்கியம். பின்னரே மகிழ்ச்சி. இந்த செல்பியை பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது’ எனப்பதிவிட்டு மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
#Master would have released by now if #CoronaOutbreak didn't happen. Can see lot of sad tweets, As a fan it hurts big. Pollution, Protests, Raid & now this. Anyway we will have the last laugh.
Survival First
Celebrations Later
Suddenly this selfie looks Nostalgic pic.twitter.com/bBRqjBRePI— Rathna kumar (@MrRathna) April 8, 2020