தளபதி விஜய் நடித்த ’பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்து வரும் நிலையில் தற்போது திடீரென ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை சென்றனர்.
அதன்பின்னர் விஜயை அவர்கள் அழைத்துச் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்தது இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது
விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் நெய்வேலி படப்பிடிப்பு தளத்திற்கு வருமானத் துறை அதிகாரிகள் சென்றனர். விஜய்யிடம் ‘பிகில் பட தயாரிப்பு குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் அவர் வருமானத் துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சம்மன் அளித்தனர்
அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஜய் படப்பிடிப்பு தளத்திலிருந்து அதிகாரிகளிடம் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் இல்லாததால் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விஜய் திரும்பி வந்தவுடன் மீண்டும் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது
பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென விஜய்யிடமும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…