ஒரே நைட்டில் வாத்தி சாதனை... நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் "மாஸ்டர்" டீசர்

by adminram |

0fb5a49b0e5a8aa44dc319be003a79c6
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீஸரை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியிட வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இதையடுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று நவம்பர் 14ம் தேதி நேற்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் ட்ரைலர் வெளியாகியது. விஜய் - விஜய் சேதுபதி மோதிக்கொள்ளும் காட்சி வேற லெவல் goosebumps கொடுத்தது. தீபாவளி தினத்தில் வெளியான இந்த டீசரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

மேலும் நேற்று முதலே #MasterTeaserDay என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியது. இந்நிலையில் தற்ப்போது இந்த டீசர் யூடியூபில் 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

கொரோனா பிரச்சனையால் மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த 10ம் தேதி தான் திறக்கப்பட்டன. இருப்பினும் மாஸ்டரை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யாமல் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Next Story