மாஸ்டர் படப்பிடிப்பை நிறுத்தினால் பொதுமக்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்: பிரபல இயக்குனர் தகவல்

விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருவதால் அதை சுற்றியுள்ள ஹோட்டல்கள், கடைகள், லாட்ஜ்கள் முழுவதும் தற்போது நிரம்பி நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருப்பதாகவும் நாளொன்றுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் படக்குழுவினர்களால் அங்கு பணப்புழக்கம் இருந்து வருவதாகவும், பத்து நாள் படப்பிடிப்பு நடந்தால் நெய்வேலி பகுதி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால் ஒரு சில அரசியல்வாதிகள் போராட்டம் நடத்தி அந்த ஊர் மக்களின் வருமானத்தை கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார் 

ஏற்கனவே பல இடங்களில் படப்பிடிப்புக்கு அரசியல் கட்சியினர் தொந்தரவு செய்வதால் தான் படக்குழுவினர் பலர் ஹைதராபாத் போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்துகிறார்கள் என்றும் அதே படப்பிடிப்பு தமிழகத்தில் நடந்தால் தமிழகத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்றும் இனிமேலாவது படப்பிடிப்புக்கு யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

Published by
adminram